×

ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான விளம்பரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒலிபரப்புத்துறை அமைச்சக செயலாளர் கடிதம்

டெல்லி: ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான விளம்பரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒன்றிய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சக செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள், ஓ.டி.டி. நிறுவனங்களும் விளம்பரம் வெளியிடக் கூடாது என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இணையதளங்கள் மட்டுமின்றி காட்சி, அச்சு ஊடகங்களிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் வெளியாவதால் ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான விளம்பரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒலிபரப்புத்துறை அமைச்சக செயலாளர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Secretary of the ,Ministry of Broadcasting ,Delhi ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர்...